கோடை காலமும்! கோபாலப்பட்டிணம் ஆலமரமும்!!
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அமைந்துள்ளது கோபாலப்பட்டிணம் என்ற அழகிய கிராமம்.கோபாலப்பட்டிணம் கடற்கரை பள்ளிவாசல் அருகே ஏறத்தாழ 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த  ஆலமரங்கள் பல இருந்தன.

படர்ந்து விரிந்து காணப்பட்ட ஆலமரங்கள் கோபாலப்பட்டிணம் மக்கள் தங்களது பொழுதுபோக்கு தளமாகவும், நிழலுக்காக இளைப்பாறும் இடமாகவும்  ஊர் மக்களின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது.

கோடை வெயில் காலங்களில் ஊர் மக்களின் தங்கும் இடம் என்றால் அது இந்த ஆலமரம் தான். அப்படி ஒரு ஜில் ஜில் காற்று அடித்துக் கொண்டு இருக்கும்.

அடிக்கிற வெயில்ல பார்த்தால் இனி காட்டுக்குள்ள தான் வீடுகட்டி வாழ வேண்டும் போல??!! இருக்கிற இடங்களையே இயற்கை காடுகளாக மாற்றினால் இன்னும் சிறப்பு.

பெருநாள் அன்று  திடல் தொழுகை எனப்படும் பெருநாள்  தொழுகை இங்குள்ள ஈஃத்கா மைதானத்தில் தான் நடைபெறும். மேலும்  மக்கள் பெருநாள் அன்று காலையில் ஆண்கள், சிறுவர்கள் ஒன்று கூடி நண்பர்களோடு சேர்ந்து பேசி மகிழ்ந்து கொள்வதும், மாலையில் ஈஃத்கா மைதானத்தில் பெண்கள் ஒன்று கூடி தன் சக தோழிகளோடும், சொந்தங்களோடும் நேரத்தை கழிப்பதும் வீட்டுக்கு செல்லும்போது பொருள்களை வாங்கி செல்வதும் மறக்க முடியா நிகழ்வாகவும் மகிழ்ச்சியான தருணமாகவும் இங்கு  நடைப்பெற்று வருகிறது.

இதனை சுற்றி பழமை வாய்ந்த பல ஆலமரங்கள் இருந்தன.இயற்கை சீற்றம் காரணமாக ஒரு சில ஆலமரங்கள் அழிந்து போயி இப்போது ஒன்று இரண்டு பழமை வாய்ந்த ஆலமரம் மட்டுமே உள்ளது. 

எனவே உள்ளதை பாதுகாக்கவும் மேலும் நமதுரின் அடையாளமான ஆலமரங்களை பல இடங்களின் வளர்க்கவும் நாம் முயற்சிக்க வேண்டும்.

ஊரில் எத்தனையோ ஆலமரம் இருந்தாலும் கூட இந்த ஆலமரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது ‌.

பொதுநல அமைப்புகள், சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்களுக்கு GPM மீடியா சார்பாக கோரிக்கை:

வளர்ந்த மரத்தை அகற்றுவது எளிது, ஆனால் அதை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் நமது ஊரில் வீழ்ந்த மூன்று மரங்களில் அவுலியா நகரில் வீழ்ந்த மரத்தை மட்டுமே அவுலியா நகர் இளைஞர்களின் முயற்சியால் அதே இடத்தில் நடப்பட்டது. 

வரக்கூடிய காலங்களில் நன்கு வளர்ந்த மரங்கள் சாய்ந்தால் அதே இடத்தில் ஊன்றி திரும்பவும் வளர்த்து எடுக்க ஊரில் இருக்க கூடிய சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகள் முன்வர வேண்டும்.

நமது ஊரை பசுமையான ஊராக மாற்ற ஊர் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையாக மரத்தை வளர்த்தெடுப்போம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

மரம் வளர்ப்பு பற்றி   இஸ்லாம்

மரம் நடுவதை, இஸ்லாம் நிரந்தர நன்மை தரக்கூடிய ஒன்றாக கூறுகிறது, மேலும் மரம் வளர்ப்பதை தர்ம செய்வதற்கு சமம் எனவும் ஊக்குவிக்கின்றது.

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி)

நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து மரம் வளர்க்க அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஊர் அக்கறையுடன்....
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments