புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வரும் 10.04.2022 அரசின் சாதானைகள் குறித்த கண்காட்சி
தமிழக அரசு 75-வது சுதந்திர தின விழாவை 'சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா' ஆக தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டாட அறிவுறுத்தியதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வருகின்ற 10.04.2022 அன்று தொடங்கி 7 நாட்கள் 16.04.2022 வரை 75-வது சுதந்திர தினவிழா - சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளது. அதன்படி புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 10.04.2022 மாலை 06.00 மணியளவில் நடைபெறும் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகளை பார்வையிடவுள்ளனர்.

 இவ்விழாவில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத்தலைவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து விடுதலைப்போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பற்றிய சிறு குறிப்புகள் இடம் பெறும் புகைப்படக்கண்காட்சியினை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. 


மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவுத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், உணவு பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், சமூகப்பாதுகாப்புத் திட்டம் (வருவாய்த்துறை), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுற்றுச்ச10ழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், வனத்துறை, பள்ளிக் கல்வித்துறை, வேலைவாய்ப்புத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.


இக்கண்காட்சிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம், மருத்துவ முகாம்கள் அமைத்தல், பள்ளி மாணவ, மாணவிகளிடையே போட்டிகள் நடத்துதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தல், மஞ்சப்பை பயன்பாடு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இக்கண்காட்சி அரங்கினை அனைத்துத் தரப்பு மக்களும் பார்வையிட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதுடன், திட்டங்கள் வாயிலாக பயன்பெற வேண்டும். மேலும் நாள்தோறும் நடைபெறும் நிகழ்;ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments