கமுதியில் உதவுவது போல் நடித்து முதியவரின் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.50 ஆயிரம் திருட்டு


கமுதி: கமுதியில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில், வேலானூருணியைச் சேர்ந்த முதியவர் ராமச்சந்திரன்(62) கடந்த மார்ச் 16-ம் தேதி பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது உதவிக்காக அருகிலிருந்த நபரிடம் ரூ.10,000 பணம் எடுத்துக் கொடுக்கக் கேட்டுள்ளார்.

அந்த நபர் முதியவருக்கு பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு, முதியவரின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பி உள் ளார்.

இதனையடுத்து கடந்த 8-ம் தேதி ராமச்சந்திரன் கமுதி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு அடகு வைத்த தனது நகையை திருப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதியவரின் கையிலிருந்த ஏடிஎம் கார்டும் அவருடையது அல்ல என்பதும், ராணி என்ற பெயரில் உள்ளதும், முதி யவரின் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து நேற்று ராமச்சந்திரன் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments