பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பேச்சு போட்டி 19-ந் தேதி நடக்கிறது
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.
மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் பங்கேற்கும் மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகையாக ரூ.2 ஆயிரம் வீதமும் வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments