காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்




திருச்சி-சென்னை பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்ல வசதியாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.


திருச்சி-சென்னை பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்ல வசதியாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் அதன் செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 

விரைவு ரெயில்கள்...

காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர் மார்க்கமாக அகலப்பாதை பணிகள் முடிவடைந்தும் விரைவு ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. முழுநேர கேட் கீப்பர்கள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது. 

தற்போது பகல் நேர கேட்கீப்பர்கள்தான் இருக்கிறார்கள். இரவு நேர கேட்கீப்பர்கள் இல்லை என ரெயில்வே அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்

இதனால் இந்த மார்க்கத்தில் ரெயில்கள் இயக்குவது தாமதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்தடத்தில் பகல் நேர கேட்கீப்பர்கள் இருப்பதால் திருச்சி-சென்னை பகல் நேர அதிவிரைவு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்வதற்கு வசதியாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு(அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர் மார்க்கமாக) இணைப்பு ரெயிலாக உடனடியாக விரைவு ரெயில் ஒன்று இயக்கப்பட வேண்டும். சமீப நாட்களாக ரத்து செய்யப்பட்ட விரைவு ரெயில்கள் பல மீண்டும் இயக்கப்படுவதும் டபுள்டக்கர் இயக்கப்படுவதும் கோடைகால சிறப்பு ரெயில் இயக்கப்படுவதும் தெற்கு ரெயில்வே அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சுமார் 120 ஆண்டுகள் பாரம்பரியமிக்க காரைக்குடி-மயிலாடுதுறை(பட்டுக்கோட்டை மார்க்கம்) தெற்கு ரெயில்வே அதிகாரிகளால் பல காரணங்களை கூறி இவ்வழித்தடம் புறக்கணிக்கப்பட்டு வருவது இப்பகுதி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எனவே சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக காரைக்குடி-மயிலாடுதுறை இணைப்பு ரெயில்(பட்டுக்கோட்டை மார்க்கம்) உடனடியாக இயக்குவதற்கு திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ே

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments