வலையப்பட்டியில் நூதன முறையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டுபொன்னமராவதி அருகே வலையப்பட்டி சங்கரன்குண்டு தெற்கு வீதியில் வசித்து வருபவர் விசாலாட்சி (வயது 74). நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விசாலாட்சியிடம் சென்று அப்பகுதியில் சற்றுமுன் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் நீங்கள் அணிந்திருக்கும் நகையை இதில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி ஒரு பையை கொடுத்து உள்ளனர். இதைதொடர்ந்து அவர்களே மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலி, வளையல் 4 பவுன் உள்ளிட்ட 9 பவுன் நகைகளை பையில் வைத்து தருவதாக கூறி வாங்கி பையை திரும்பவும் கொடுத்துள்ளனர். வீட்டில் வந்து மூதாட்டி பையை பார்த்தபோது அதில் மண்ணும், கல்லும் இருந்தது தெரியவந்தது. இது குறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் விசாலாட்சி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments