மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மணமேல்குடியில் நாளை மறுநாள் நடக்கிறது
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மணமேல்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமை தாங்குகிறார். இதில் மீனவர்கள் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இதில் மீனவ கிராம மக்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments