பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக விவாதங்களில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. எம்.எம்.அப்துல்லா




நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக விவாதங்களில் பங்கேற்ற பெருமை தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவுக்கு கிடைத்து இருக்கிறது.
162 விவாதங்களில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டதால் முதல் இடத்தை அவர் பிடித்துள்ளார். இதுகுறித்து ‘டுவிட்டரில்’ அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “நம்பிக்கை வைத்து என்னை அனுப்பிய தலைவரின் நம்பிக்கையை என்றும் காப்பேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments