நகராட்சிக்கு சொத்து வரி, கடை வாடகை நிலுவை; ஜப்தி நடவடிக்கைக்கு அறிவிப்பு




புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் நகராட்சி கட்டிடங்களில் வாடகை வரி செலுத்தப்படாமல் நிலுவை தொகை வைத்திருப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சீல் வைப்பது மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சி வருவாய் அலுவலர் விஜயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள், புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள அரசு மதுபான கடை முன்பு குத்தகை பாக்கியை உடனே செலுத்த வலியுறுத்தி பதாகை வைத்ததோடு 10 நாட்களுக்குள் குத்தகை பாக்கி செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் ஒரு வணிக வளாகம், வணிக கட்டிடத்திற்கு உடனடியாக சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்தனர். மொத்தம் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த எச்சரிக்கை பலகையை வைத்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments