அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பாக நோன்பு பெருநாள் பங்களிப்பு நன்கொடை வழங்கல் நிகழ்ச்சி..........
அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பாக 25 ஆம் நாள் ரமலான் நோன்பு பெருநாள் பங்களிப்பு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

23.04.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வசம் 25ஆம்  நாள் ரமலான் நோன்புத் திருநாள் நன்கொடையாக பாரம்பரிய வழக்கப்படி அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் சார்பாக ரூபாய் 26000/- காசோலை வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் வர்த்தக சங்கத் தலைவர் S.காமராஜ் நன்கொடை க்கான காசோலையை ஜமாத் தலைவர் திரு. ஷேக் அப்துல்லா வசம் ஒப்படைத்தார். இதில் செயலாளர் திரு. V. தவசுமணி பொருளாளர் திரு. S. சேக் அப்துல்லா  முன்னாள் வர்த்தக சங்க தலைவர்கள் திரு.A.B. ராஜ்குமார் திரு.ஆதி.ரவீந்திர குமார் திரு. N.சந்திரமோகன் அரோமா கம்ப்யூட்டர்ஸ் திரு. மூ.சி. பன்னீர்செல்வம். சுந்தரம் பேக்கரி திரு. S.விஸ்வமூர்த்தி.MC ஜோதி மெஸ் திரு.கருப்பையா கண்ணன் எலக்ட்ரிகல்ஸ் திரு. கண்ணன் மற்றும் ஜமாத் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments