கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம்!





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி  ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி பஷீர் அகமது MSc,.BEd., தலைமை தாங்கினார். ஆவுடையர்கோவில் ஒன்றிய பொறியாளர் கலையரசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ஸ்டெல்லா வரவேற்று பேசினார். கூட்டத்தில் வேளாண்துறை சார்பில் தமிழகஅரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

பின்னர், நீடித்த வளர்ச்சி இலக்கை அடையும் வகையில் வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான வாழ்வு, குழந்தை நேயம், குடிநீர் வசதி, சமூக பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம், அடிப்படை வசதிகள், பசுமையும், தூய்மையும் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊராட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம் என்று விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்தில் பெரும்பான்மையான ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஊராட்சி மன்ற துணை தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments