புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர்... விசாரணையில் கணவர் தலையீடக்கூடாது என உத்தரவு.!!
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில் விசாரணையில் கணவர் தலையீடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் 19.04.2022 தேதியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கிய புகார் மனு தொடர்பாக 25.4.2022 தேதி முற்பகல் 11.30 மணிக்கு நட்டணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி இயக்குனர் (தணிக்கை) தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு நேரடி விசாரணை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். (மொத்த உறுப்பினர்கள் 12 நபர்கள்)

 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நேரடி விசாரணையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.

1.நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் 25.4.2022 வரை பட்டுவாடா செய்யப் படாமல் நிலுவையிலுள்ள செலவிச் சீட்டுகளை அந்தந்த வார்டு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பட்டுவாடா செய்ய தீர்மானிக்கப்பட்டது.

2.ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஈடுபடக்கூடாது எனவும், மேலும் உறவினர்களுடைய ஈடுபாடு இருக்கக்கூடாது எனவும் கண்டிப்பாக தீர்மானிக்கப்பட்டது.

3.வார்டு உறுப்பினர்கள் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரின் கோரிக்கையின்படி ஊராட்சி மன்ற தலைவரை தொலைபேசியில் நிர்வாக காரணங்களுக்காக தொடர்பு கொள்ளும் போது ஊராட்சி மன்ற தலைவர் மட்டுமே தொலைபேசியில் பதில் தெரிவிக்க தெரிவிக்கப்பட்டது. அதனை ஊராட்சி மன்ற தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்கள் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் ஊராட்சி நிர்வாகத்தை நடத்தி செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பு ஆவார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments