விரைவில் காரைக்குடி - சென்னை விரைவு இரயில் மற்ற இரயில்களை இயக்க வேண்டி வலியுறுத்தி முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை MPயிடம் ஆவன செய்ய கோரிக்கை
விரைவில் காரைக்குடி -   சென்னை விரைவு இரயில் மற்ற இரயில்களை இயக்க வேண்டி வலியுறுத்தி முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் மற்றும்  இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை  MPயிடம் ஆவன செய்ய கோரிக்கை

விரைவில் காரைக்குடி - அறந்தாங்கி - பட்டுக்கோட்டை வழியாக சென்னை விரைவு இரயில் மற்ற இரயில்களை இயக்க வேண்டி வலியுறுத்தி
முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் மற்றும்  இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில்
சிவகங்கை  MPயிடம் ஆவன செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்

பெறுநர்: மாண்புமிகு கார்த்திக் சிதம்பரம் அவர்கள்
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்நாடு

ஐயா,

கடந்த 2010ம் ஆண்டு திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் இயங்கி வந்த மீட்டர்கேஜ் இரயில் தடம் பிராட்கேஜாக மாற்ற வேண்டி இந்த மார்க்கத்தில் இரயில்கள் நிறுத்தப்பட்டு 1000 கோடி ரூபாய்க்கு மேல்செலவு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்று பல ஆண்டுகளுக்கு பிறகு 2019ம் ஆண்டு ஒரே ஒரு டெமோ இரயில் மட்டும் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றது. இதுவரை இந்த மார்க்கத்தில் கேட்களுக்கும் 72 கேட்கீப்பர்கள் நியமிக்கப்படாமல் மத்திய இரயில்வே துறை காலம் கடத்தி வருவதால் எக்ஸ்பிரஸ் இரயில்கள் இயக்கப்படாமல் முத்துப்பேட்டை அலையாத்திகாடு காணவரும் சுற்றுலா பயணிகளுடன், பொதுமக்களும், மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள்வரை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கூடிய விரைவில் இத்தடத்தில் முன்பு இயங்கி வந்தது போன்று அனைத்து இரயில்களையும் இயக்கிட தாங்கள் ஆவன செய்து உதவிடுமாறு முத்துப்பேட்டை அனைத்து மக்களின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments