மாவட்ட தொழில் மையத்தால் பயன்படுத்தப்பட்ட பழைய நான்கு சக்கர வாகனம் ஏலம் 18-05-2022 அன்று நடைபெறுகிறது
புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனத்தினை வருகின்ற 18.05.2022-ம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
வாகனத்தினை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 11.05.2022 மற்றும்
12.05.2022 ஆகிய இரண்டு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டதொழில் மைய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொலிரோ TN 55 G 0288 எண்ணுள்ள வாகனத்தினை நேரில் பார்வையிடலாம்.

மேலும் வாகனத்தினை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 18.05.2022 அன்று காலை 10 மணிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5,000 முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத் தொகையுடன் சரக்கு மற்றும் சேவைவரி கட்டணமாக 18 சதவீதம் சேர்த்து முழு தொகையையும் உடனடியாக செலுத்தி விட்டு வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். 

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றியிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments