கிருஷ்ணாஜிபட்டினம் டிஎன்டிஜே சார்பில் தண்ணீர் பந்தல்


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜிப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் கிளையின் சார்பாக பொது மக்களுக்கு பயன்படும் வகையில் கடைவீதீயில் நீர்மோர் மற்றும்  தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. கிளை தலைவர் நெய்னா முகம்மது முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார் உரையாற்றினார். அவர் பேசும்போது இஸ்லாம் என்றாலே பிறர்நலம் நாடுவது தான் இந்த வெயில் காலங்களில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், பொதுமக்களுக்கு  உதவியாக இந்த சேவையை செய்து வருகிறோம்,இது மட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழக அளவில் அவசர காலங்களில் இரத்த தான சேவையும் செய்து வருகிறோம் என்று உரையாற்றினார்.

கிருஷ்ணாஜிபட்டினம் கிளை செயலாளர், சைபுல்கரீம் 
பொருளாளர், சல்மான் கான்
து, தலைவர், முகைதீன் காதர்
து, செயலாளர் அபதுல் மாலிக் 
தொண்டரணி, நஜிமுதீன் ஆகியோர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments