தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல்லவன் ரயில் நாளை வழக்கம்போல் சென்னை_எழும்பூர் வரை இயங்கும் என அறிவிப்பு


காரைக்குடி - சென்னை பல்லவன் மற்றும் சென்னை - மதுரை வைகை ரயில்கள் நாளை ஏப்ரல் 13 வழக்கம் போல் இயங்கும் என‌ அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை - விழுப்புரம் ரயில்வே பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.எனவே, ஏப்ரல் 13 அன்று காரைக்குடியிலிருந்து அதிகாலை 05.30 மணிக்கு புறப்படும் காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் சென்னையிலிருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை செங்கல்பட்டு சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த ரயில்கள் தற்போது தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் இயங்கும்.பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (காரைக்குடி டு சென்னை எழும்பூர்‌ வழி : புதுக்கோட்டை)

நாளை(13/04/22) அன்று புதுக்கோட்டையிலிருந்து காலை 06:05 AM மணிக்கு புறப்படும் 12606/காரைக்குடி-சென்னை எழும்பூர் 'பல்லவன்' ரயில், வழக்கம்போல் சென்னை எழும்பூர் வரை இயங்கும் என அறிவிப்பு என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

குறிப்பு: முன்பு இந்த ரயில் ஏப்ரல் 13 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுத்துவதாகவும் மேலும் இந்த ரயில் 'செங்கல்பட்டு' வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த ரயில் வழக்கம்போல் சென்னை எழும்பூர் வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments