கோபாலப்பட்டிணத்தில் மதரஸாக்கள் நாளை (மே 16) திறப்பு

கோபாலப்பட்டிணத்தில்  மதரஸாக்கள் நாளை (மே 16) திறக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மதரஸாக்கள் காலை மாலை வகுப்புகள் செய்யப்பட்டு வருகிறது

மதரஸாக்களுக்கு கடந்த மார்ச் மாதம் இறுதியில்  நோன்பு கால விடுமுறை விடப்பட்டது. நோன்பு கால விடுமுறைக்கு பின்பு கோபாலப்பட்டினம் முழுவதும் நாளை மே 16 திங்கட்கிழமை மதரஸாக்கள் திறக்கப்பட உள்ளன.

பெற்றோர்கள் கவனத்திற்கு

கோபாலப்பட்டினத்தில் உள்ள அனைத்து ரஹ்மானியா குர்ஆன் மதரஸாக்கள் நாளை 16/05/2022 திங்கட்கிழமை திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அது சமயம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உரிய நேரத்தில் மதரஸாவிற்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் நேரம் : 

காலை- 7.00 மணி முதல் 8.00 மணி வரை
மாலை- அஸர் தொழுகைக்கு பின் 5.30 மணி வரை

ஆண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடங்கள்:

* பெரியபள்ளிவசால் வளாகம்
* காட்டுகுளம் பள்ளிவாசல் வளாகம்
* அவுலியா நகர் பள்ளிவாசல் வளாகம் 
* கடற்கரை பள்ளிவாசல் வளாகம்

பெண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடம்:

ரஹ்மானியா பெண்கள் மதரஸா

குறிப்பு : கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா காட்டுகுளம் பள்ளிவாசலில் தற்சமயம் சில நாட்களுக்கு  நடைபெறும்.

ரஹ்மானியா பெண்கள் மதரஸாவும் 16/05/2022  திங்கட்கிழமை அன்று  திறக்கப்படுகிறது

கல்வி பற்றி நபிமொழி:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 

1.நிலையான அறக்கொடை 
2. பயன்பெறப்படும் கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. 

அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி)  நூல்:ஸஹீஹ் முஸ்லிம்

தகவல்:
உஸ்மான் ஆலிம் அவர்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments