2022 நோன்பு பெருநாள் : உள்ளுர் , வெளிநாடு வாழ் கோபாலப்பட்டினம் சகோதரர்களின் கவனத்திற்குஉள்ளுர் , வெளிநாடு வாழ் கோபாலப்பட்டினம் சகோதரர்களின் கவனத்திற்கு

நோன்பு பெருநாள் கொண்டாட இருக்கும் உள்ளுர் வாழ் கோபாலப்பட்டிணம் சொந்தங்கள் மற்றும் கடல் கடந்து வாழும் வெளிநாடு வாழ் கோபலப்பட்டிணம் சொந்தங்கள் அனைவருக்கும்   பெருநாள் வாழ்த்துக்களை உங்களின் தாயக இணைப்பு பாலமாக இருக்கும் GPM மீடியா தெரிவித்து கொள்கிறது.

தாங்கள் நண்பர்கள், ஈகை திருநாளின் புகைப்படங்களை எமது GPM மீடியா இணையதளம் வாயிலாக உங்களின் உறவுகளுக்கு சென்றடைய, பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்களை விபரத்துடன் அனுப்பி தாருங்கள்.

அதனை GPM மீடியா இணையதள்த்தில் ஒருசேர பதிவேற்றி உங்களின் பெரு நாள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறோம்.

வாருங்கள் ஒன்றினைந்து கொண்டாடுவோம்.....

புகைப்படங்களை கீழ்காணும் பகிரி எண்ணுக்கு பகிர வேண்டுகிறோம்.

 புகைப்படங்களை அனுப்ப வேண்டிய

வாட்ஸ் ஆப் எண் 


வெளி நாடு வாழ் சகோதரர்கள் பார்வைக்கு

வெளிநாட்டில்  வாழக்கூடிய நமது ஊர் சகோதரர்கள் குறிப்பாக வளைகுடா, தென் கிழக்கு ஆசியா நாடுகள் மற்றும் உலகில் பறந்து வாழ்ந்து வருகின்றனர். 

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், பக்ரைன்,  ஓமன், சிங்கப்பூர், மலேசியா, புருனை இந்த நாடுகளில் கணிசமாக வாழ்கின்றனர். மற்றும் பிற நாடுகளில் ஒரு சில சகோதரர்கள் வாழ்ந்து வருகின்றனர். 

இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு (2022) நோன்பு பெருநாள் அன்று  வெளிநாடுகளில் பெருநாள் கொண்டாட கூடிய கோபாலப்பட்டிணம் சகோதரர்கள் தொழுகை முடிந்த பிறகு  நம் ஊர் மக்கள் ஒன்றாக நின்று செல்பி, குரூப் புகைப்படங்கள் அல்லது ஒரு சில நாடுகளில் ஒருவர் அல்லது இருவராக வாழும் கோபாலப்பட்டிணம் சகோதரர்கள் தனியாக செல்பி புகைப்படங்களை எங்களது GPM MEDIA அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் wa.me/918270282723 என்ற நம்பருக்கு அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

உள்ளுர் வாழ் சகோதரர்கள் பார்வைக்கு

உள்ளூரில் வாழ கூடிய கோபாலப்பட்டிணம் சகோதரர்கள்,  இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு (2022) நோன்பு பெருநாள் அன்று  கோபாலப்பட்டிணத்தில்  தொழுகை முடிந்த பிறகு இளைஞர்கள், அண்ணன்கள், தம்பிகள் இணைந்து எடுத்த செல்பி புகைப்படங்கள், குரூப் புகைப்படங்களை எங்களது GPM MEDIA அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் wa.me/918270282723 என்ற நம்பருக்கு அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

பின்பு தாங்கள் அனுப்பிய புகைப்படங்களை GPM மீடியா இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஒரு பதிவாக பதியப்படும்.

இவ்வாறு பதியப்படும் பதிவுகள் வரக்கூடிய இளைய தலைமுறைகள் பார்ப்பதற்கும் இவை அழியாத எப்போது வேண்டுமானாலும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

குறிப்பு: உங்களுடைய புகைப்படங்களை பெருநாள் அன்று இந்திய நேரப்படி மாலை 6 மணிக்குள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். இடத்தை குறிப்பிட்டு அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

உதாரணமாக  (Example) : நீங்கள் அனுப்பவேண்டியது 

கோபாலப்பட்டிணம், +புகைப்படங்கள் 

சவூதி அரேபியா / புருனை  .... + புகைப்படங்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments