கோட்டைப்பட்டினத்தில தமுமுக முஸ்லிம் ஜமாஅத்தும் (வக்ஃப்) இணைந்து நடத்திய 5 ஆம் ஆண்டு இலவச கத்னா முகாம்

கோட்டைப்பட்டினத்தில தமுமுக முஸ்லிம் ஜமாஅத்தும் (வக்ஃப்) இணைந்து நடத்திய 5  ஆம் ஆண்டு இலவச கத்னா முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் த.மு.மு.க மருத்துவ சேவை அணியும் கோட்டை பட்டினம் முஸ்லிம் ஜமாஅத்தும் (வக்ஃப்) இணைந்து நடத்திய 5  ஆம் ஆண்டு இலவச கத்னா முகாம் கோட்டை பட்டினம் பெரிய பள்ளிவாசலில் (28/05/2022,சனி கிழமை) காலை 8 மணியளவில் நடைபெற்றது.

ஜமாஅத் தலைவர்  ஹாஜி K.S.முஹம்மது காசிம் தலைமை வகித்தார்கள் ‌. முன்னாள் மாவட்ட தலைவர் த. மு. மு.க
ஜனாப் A. அபூசாலிகு  முன்னிலை வகித்தார்கள்.ஜனாப் ஜிம்( எ) ஷரீப் அப்துல்லாஹ் ஜமாஅத் து.தலைவர்
ஜனாப் M.P.S.பாருக் Ex ஜமாஅத் தலைவர்
மற்றும் கோட்டைப்பட்டினம் உலாமா பெருமக்கள் முகாமை துவக்கி வைத்தார்கள்

மௌலவி அப்துல்லாஹ் அன்வாரி கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் மேலும் கோட்டை பட்டினம் த. மு. மு.க பொறுப்பாளர்கள் சாஜிதீன் கலந்தர் சாகுல் ஹமீது (S.M.I) மேலும் கோபால பட்டினம் த. மு. மு.க பொறுப்பாளர் சிராஜிதீன் மற்றும் ஜமா அத்தார்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 30  பயனாளிகள் பயனடைந்து கொண்டனர்

இந்த நிகழ்விற்கு பொருளாலும்,உடல் உழைப்பாலும், ஆலோசனைகளாலும் உதவி செய்த அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுக்கோட்டை கிழக்கு  மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் M.S.K. முஹம்மது சாலிகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் செய்தார்கள்

என்றும் மக்கள் பணியில்

த. மு. மு.க & ம.ம.க மற்றும் முஸ்லிம் ஜமாஅத் வக்ஃப் கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments