மணமேல்குடியில் பலத்த மழை உயர்கோபுர மின்விளக்கு சாய்ந்து விழுந்தது

மணமேல்குடி, தண்டலை, பட்டங்காடு, அம்மாபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வயல்களில் மழை நீர் தேங்கி நின்றது. கடும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்று காரணமாக மணமேல்குடி தண்டலை சாலையோர பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த உயர் கோபுர மின்விளக்கு சாய்ந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. அதேபோல் நேற்று முன்தினம் இரவு கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு பகுதியில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும், பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments