எஸ்.பி.,பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சுந்தரபாண்டிய பட்டிணம் எனப்படும் எஸ்.பி. பட்டிணம் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எஸ்.பி.பட்டிணம் பந்தய ரசிகர்க ளால் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம்  நடைபெற்றது.

திருவாடானை யூனியன் சேர்மன் முஹம்மது முக்தார் மற்றும் ஜமாத் தலைவர் ஹசன் அலி ஆலிம் ஆகியோர் தலைமை தாங்கினார். மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு, சின்னமாடு என 2 வகையான மாட்டு வண்டிகள் தனித்தனியே 2 கட்டங்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெ ற்றது.

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 25 மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.

2 கட்டமாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் 4 மாட்டு வண்டிகளுக்கு பரிசுத் தொகையும், வெற்றி க்கான கோப்பையும் வழங்கப்ப ட்டது. மேலும் ஒவ்வொரு மைல் தூரத்திலும் முதலா வதாக வரும் மாட்டின் உரிமையாளருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையின் இருபுறமும் ஆரவாரம் செய்து போட்டியை கண்டு களித்தனர். 

திருவாடானை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ தலை மையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
   
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments