புதிதாக தொழில் தொடங்க மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி கலெக்டர் கவிதாராமு தகவல்




புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, கலெக்டர் கவிதா ராமு நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தக்கோட்டை ஊராட்சியில் முல்லை அரும்பு சுயஉதவிக்குழுவினர் மூலம் காளான் வளர்ப்பு குறித்தும், வேங்கிடகுளம் ஊராட்சியில் அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் பட்டுப்புழு வளர்ப்பு குறித்தும் பார்வையிட்டார். அதன்பின் கலெக்டர் கவிதாராமு கூறுகையில், ‘‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், அவர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து, புதிதாக தொழில் தொடங்க கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. மகளிர் சுயஉதவி குழுவினர் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ், தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காளான் மற்றும் பட்டு புழு வளர்ப்பு கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புத்தகத்தை கலெக்டர் கவிதாராமு வெளியிட்டார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments