புதுக்கோட்டையில் மின்சார வாரிய ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் உயர் அதிகாரிகள் விசாரணை




புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வணிக ஆய்வாளர் ஒருவர் பயனாளியிடம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ரூ.200 கேட்டதில் தன்னிடம் ரூ.170 தான் இருப்பதாக கூறுகிறார். அதனை மின்சார வாரிய ஊழியர் வாங்கி சட்டை பையில் வைப்பதும் பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை சமத்துவபுரம் நரிமேடு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக குடியிருப்புகள் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்ததில் அந்த பயனாளியிடம் மின்சார வாரிய ஊழியர் லஞ்ச பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ பற்றி மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. இது தொடர்பாக அந்த ஊழியரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments