கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சித் திட்ட முகாம்:


கோபாலப்பட்டிணத்தில் வேளாண் வளர்ச்சித் திட்ட முகாம் நடைபெற்றது.

தமிழக அரசு, வேளாண் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை அறிவித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், ஊராட்சிகள் வாரியாக முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
இதில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, பட்டா மாறுதல், சிறு குறு விவசாயி சான்று, பயிர் கடன், கால்நடை முகாம், கிசான் கடன் அட்டை, ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்தல் மற்றும் இதர திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பெறுவர், என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மே 10 செவ்வாய்க்கிழமை
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர். மேலும் கிசான் திட்டத்தின் ஊக்கத் தொகை, கிசான் கடன் அட்டை, குளங்களில் வண்டல் மண் எடுக்க, கால்நடை செயற்கை கருவூட்டல், பட்டா மாறுதல் உள்ளிட்ட போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments