பட்டுக்கோட்டையில் ரெயில் தண்டவாளம் அருகே நாய் கடித்து குதறிய நிலையில் ஆண் குழந்தை பிணம் - போலீசார் விசாரணை...!
பட்டுக்கோட்டையில் ரெயில் தண்டவாளம் அருகே நாய் கடித்து குதறிய நிலையில் கிடந்த ஆண் குழந்தையின் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் அருகே நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் ஆண் குழந்தை உடல் கிடந்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே நாடியம்மன் கோவில் செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளத்தின் அருகே இன்று காலை பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை பிணம் கிடந்தது. 

இதை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து குதறியதில் கை, கால்கள் துண்டு துண்டாகக் கிடந்தது. நாய்கள் கூட்டமாக சுற்றி வந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது ஆண் குழந்தை பிணம் கிடந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அங்கிருந்து தெரு நாய்களை விரட்டிய பொதுமக்கள் ரெயில் நிலையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு பல மணி நேரமாகியும் ரெயில்வே போலீசார் வராததால் இதையடுத்து பட்டுக்கோட்டை போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பட்டுக்கோட்டை நகர போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments