இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை- சவுதி அரேபியா உத்தரவு


கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்ப்யா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மெனியா, பெலாரஸ், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்தியாவில் இருந்து சவுதி செல்லும் மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை.

மேலும் உலக நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு, ‘தற்போது வரை குரங்கம்மை பரவல் மனிதர்களிடையே மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால் பெருந்தொற்றாக பரவும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் அதன் நிலைமை குறித்து கண்காணித்து வருகிறோம்’ என கூறியுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments