எர்ணாகுளம்-வேளாங் கண்ணி இடையே அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் வேண்டும் என்று பயணி கள் வலியுறுத்தினர்.
சிறப்பு ரெயில்
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம் -வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில் அடுத்தமாதம் முதல் வருகிற ஆகஸ்டு மாதம் வரை வாரந்தோறும் இயக்கப் படஉள்ளது. அதன்படி., இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06035) எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 4-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை சனிக் கிழமை தோறும் மதியம் 12.35 மணிக்கு புறப்படுகிறது.
மறுநாள் அதிகாலை 5.50 ரெயில்கள், கோட்டயம், செங்கனாச்சேரி,திருவல்லா.
செங்கனூர். மாவேலிக்கரா, காயன்குளம், சாஸ்தான் கோட்டை, கொல்லம், குன்டரா. கொட்டாரக்கரா, அவனிஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை,
கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர். அருப்புக்கோட்டை, காரைக்குடி. அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி திருவாரூர். நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தற்போது இந்த ரெயில்கள் நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும். வேளாங் கண்ணி வரை இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறு மார்க்கத்தில் சிறப்பு ரெயில் (வ.எண்.06036) வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 5-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழ மைகளில் மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
அறிவிப்பு
ஆனால், இந்த ரெயில், தென்காசி ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தென்மாவட்ட பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. தென்காசி ரெயில் நிலையம் தென்மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய சந்திப்பு ரெயில் நிலையமாகும். முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமாக இருப்பதால் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பயனடைந்து வருகின்றனர்.
கோரிக்கை
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் என்பது தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். ஆனால், அந்த ஊரிலேயே ரெயில் நிற்காமல் செல்வது குறித்த அறிவிப்பு ரெயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரெயிலுக்கு தென்காசி ரெயில் நிலையத்தில் என்ஜின் மாற்றும் வேலையும் கிடையாது. எனவே, ரெயில்கள் இயக்கப்படும் போது. தென்காசி ரெயில் நிலையத்துக்கு நிறுத்தம் கொடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.