அதிக அளவில் வெளிநாட்டு பயணிகளை கையாண்டதில் திருச்சி விமான நிலையத்திற்கு 11-வது இடம்திருச்சி விமான நிலையத்திற்கு 11-வது இடம் பிடித்தது. 

திருச்சி செம்பட்டு:

அதிக விமானங்கள் இயக்கம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு மீட்பு விமானங்களாக இயக்கப்பட்டு வந்த விமானங்கள், தற்போது தினசரி சேவையாக இயக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிந்தோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமானங்களை இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் உலக நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவைகளை அதிக அளவில் தொடங்கின. 10-வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு திருச்சியில் இருந்து ஒரு சேவையாக வெளிநாடுகளுக்கு இயங்கி வந்த விமானங்களை, தற்போது 2 அல்லது 3 விமான சேவைகளாக விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதனால் திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 68,188 வெளிநாட்டு விமானங்கள் மூலம் பயணிகளை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்த வகையில் திருச்சி விமான நிலையம் இந்தியாவில் அதிக அளவிலான வெளிநாட்டு பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் 11-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலைய ஆணையக்குழு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை முறையே டெல்லி, மும்பை, கொச்சி, சென்னை, ஐதராபாத் விமான நிலையங்கள் பிடித்துள்ளன. இதில் 10-வது இடத்தில் கொல்கத்தா விமான நிலையம் உள்ளது. மே மாதத்தில் அதிக அளவில் பயணிகளை திருச்சி விமான நிலையம் கையாண்டு 10-வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 65 சதவீத பணிகள் நிறைவு மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதிதாக விமானங்களை வெளிநாடுகளுக்கு விமான நிறுவனங்கள் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணி சுமார் ரூ.950 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments