சமூக ஆர்வலர்கள் ( 𝙍𝙏𝙄 𝘼𝘾𝙏 2005 )
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பணியினை செயல்படுத்த கிளர்க்குகள் உள்ளனர். இவர்களுக்கான பணி நிபந்தனைகள், நிர்வாக கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இரண்டு அரசாணைகள் உள்ளது.
அரசாணை எண் – 175, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (இ5) துறை, நாள் – 05.12.2006
அரசாணை எண் – 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (இ5) துறை, நாள் – 29.08.2011
கிளர்க் ஊராட்சி தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிளர்க்குகளின் பணிப்பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்.
கடமைகள் மற்றும் பொறுப்புகள் :-
* வரி கேட்புகளை தயாரித்தல் மற்றும் அனுப்புதல்.
* ஊராட்சி வரி உள்ளிட்ட வருவாய் வசூல் மற்றும் ரசீது புத்தகங்கள் மற்றும் தொடர்புடைய இதர பதிவேடுகளை பராமரித்தல்.
* அருவருக்கத்தக்க மற்றும் அபாயகரமான தொழில்களுக்கான கட்டணம் வசூலித்தல்.
* ஊராட்சியின் சொத்து பதிவேடுகளை பராமரித்தல்
* ஊராட்சியின் மாதாந்திர கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்தல்.
* கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தல்.
* ஊராட்சியின் தீர்மானங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் உதவி இயக்குநர் (ஊராட்சி) ஆகியோர்களுக்கு அனுப்புதல்.
* கிராம ஊராட்சியின் குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு உதவி செய்தல்.
* கிராம ஊராட்சியின் வரவு செலவு திட்டத்தை தயாரித்தல்.
* கிராம ஊராட்சியின் சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் ஊராட்சி புறம்போக்கு நிலங்கள் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல்.
* கிராம ஊராட்சி பணியாளர்களுக்கான ஊதியம் வழங்கும் பதிவேடுகளை பராமரித்தல்.
* கிராம ஊராட்சி தொடர்புடைய அனைத்து எழுத்துப் பணிகள்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி பணியாளர் வருகைப் பதிவேட்டு பராமரித்தல்.
* அரசு / ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் / மாவட்ட ஆட்சியர் ஒப்படைக்கும் இதர பணிகளை செய்தல்.
* கிராம ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் தொடர்பாக அடிப்படை புள்ளி விவரங்களை தொகுத்து உயர் அலுவலர்களுக்கு அனுப்பி அரசு திட்டங்களின் பயன்கள் ஒவ்வொரு மக்களுக்கும் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
* கிராம ஊராட்சியின் கட்டாய மற்றும் விருப்பக் கடமைகளை நிறைவேற்ற மேலே குறிப்பிட்டுள்ள பணிகள் அனைத்தையும் செய்ய வேண்டியது கிளர்க்குகளின் கடமை மற்றும் பொறுப்புகள் ஆகும்.
* கிராம ஊராட்சியின் கட்டாய கடமைகள் என்ன என்பது குறித்து 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 110 கூறுகிறது. அதன்படி கிராம ஊராட்சியில் புதிய சாலைகள் அமைப்பது சாலைகளை மேம்படுத்துதல்.
* சாலைகளின் தரம் உயர்த்துதல்.
* பாலங்கள் கட்டுதல்.
* பழுதடைந்த சாலைகளை புதுப்பித்தல்.
* கிராம தெருக்களில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல்.
* புதிய தெருவிளக்குகள் அமைத்தல்.
* தெரு விளக்குகளை பராமரித்தல்.
* பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல்.
* குடிநீர் பராமரிப்பு பணிகள்.
* பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
* சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்தல்.
* இடுகாடு மற்றும் சுடுகாடு ஆகியவற்றை அமைத்து பராமரித்தல்.
ஆகியவை ஒரு கிராம ஊராட்சியின் கட்டாய கடமைகள் ஆகும். இவற்றை ஊராட்சி மன்றத் தலைவர் செய்தே ஆக வேண்டும். அதற்கு கிளர்க் உதவி செய்ய வேண்டும்.
விருப்பக் கடமைகள் குறித்து பிரிவு 111 கூறுகிறது.
* சாலைகளின் இரு புறமும் மரங்கள் நட்டு பராமரித்தல்.
* ஊராட்சியின் வருமானத்தை அதிகரிக்க சந்தைகள் அமைத்து பராமரித்தல்.
* இறைச்சி கூடங்கள் கட்டுதல்.
* பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்குமிடம் அமைத்து பராமரித்தல்.
* நூலகங்கள் அமைத்தல்.
* தொலைக்காட்சி அறை, விளையாட்டு திடல் மற்றும் பூங்காக்கள் அமைத்து பராமரித்தல்.
* உடற்பயிற்சி நிலையம் அமைத்து பராமரித்தல்.
* சமுதாய கூடம் கட்டுதல்.
* வண்டி நிறுத்துமிடம், பேருந்து நிறுத்துமிடம், கால்நடை தொழுவங்கள் ஆகியவற்றை பராமரித்தல்
ஆகியவை விருப்பக் கடமைகள் ஆகும்.
* ஒரு கிராம ஊராட்சியானது கட்டாய கடமைகள் போக விருப்பக் கடமைகளையும் ஊராட்சியின் நிதிநிலைக்கு ஏற்ப முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
இவை அனைத்துக்கும் கிளர்க் பக்க பலமாக இருந்து ஊராட்சி மன்றத் தலைவருக்கு உதவி செய்ய வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.