கோபாலப்பட்டிணத்தில் கோவை இன்லைப் விஷன்கேர் & கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்
கோபாலப்பட்டிணத்தில் கோவை இன்லைப் விஷன்கேர் & கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் கோவை இன்லைப் விஷன்கேர் & கோபாலப்படடிணம் என்றும் உதவும் கரங்கள் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் : 09.05.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் துவங்கி மாலை 5.00 மணி வரை   கோபாலப்பட்டிணம் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மீமிசல் காவல்துறை அதிகாரி இளையாராஜாஅவர்கள் துவக்கி வைத்தார்கள் , கோபாலப்பட்டிணம் ஊர் ஜமாஅத்தார்கள் முன்னிலை வகித்தார்கள்.

முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு கண் வலி ,கருவிழி நோய்கள் ,கண் எரிச்சல் ,கண்ணில் நீர் வடிதல் ,வெள்ளெழுத்து  ,கண் புரை பரிசோதனை , கிட்ட பார்வை ,தூரப்பார்வை ,கண்நீர் அழுத்த வியாதி ,கருவிழி புண் உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்தார்கள்.

இதில் மொத்தம்  (126) நபர்கள் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதியம் 2 மணி வரை என அறிவிக்கப்பட்ட முகாம்  மக்கள் அதிமாக வந்த காரணத்தால் மாலை 5.00 மணி வரை இம்முகாம் நடைபெற்றது.

முகாம் ஏற்பாடுகளை  என்றும் உதவும் கரங்கள் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

மக்களுக்கு பயனளிக்க கூடிய மகத்தான சேவை செய்த கோவை இன்லைப் விஷன்கேர்யும் & கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளையையும் இதற்காக உழைத்த, பொருளாதார உதவிகள் செய்த அத்துணை பேர்களையும் GPM மீடியா  வாழ்த்தி & பாராட்டுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments