எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில்: கூடுதலாக 4 இடங்களில் நின்று செல்லும் என அறிவிப்பு


எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் கருநாகப்பள்ளி
தென்காசி பேராவூரணி மானாமதுரையில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்காவுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனடிப்படையில் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே ரயில்சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. பகல் 12.35 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்படும் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணியளவில் வேளாங்கண்ணியை வந்தடையும்.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு கேரள மாநிலம் கருநாகப்பள்ளி, தமிழக பகுதிகளில் தென்காசி, மானாமதுரை மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் 11 முதல் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) கருநாகப்பள்ளி, தென்காசி, மானாமதுரை, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று முறையே மாலை 03.03, இரவு 08.15, 11.50, அதிகாலை 02.06 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில் ஜூன் 12 முதல் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) பேராவூரணி, மானாமதுரை, தென்காசி, கருநாகப்பள்ளி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று முறையே இரவு 10.15, அதிகாலை 12.40, 03.52, காலை 09.02 மணிக்கு புறப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம் - வேளாங்கன்னி வாரந்திர ரயிலை, நாள்தோறும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments