புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவடைந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்த 2 மையங்களும், பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்த 3 மையங்களும் என மொத்தம் 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

2 லட்சம் விடைத்தாள்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 மையங்களில் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஆகியோர் விடைத்தாள்களை திருத்தினர். இன்று (வியாழக்கிழமை) முதல் இவர்களுக்கு கீழ் ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

5 மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் திட்டமிட்டப்படி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments