முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி புதுக்கோட்டை வருகை
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி புதுக்கோட்டை வருகிறார்.  புதுக்கோட்டை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் புதுக்கோட்டைக்கு வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த விழாவானது புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக விழா மேடை, பந்தல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான கால்கோள் நடும் விழா நேற்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். 

இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பந்தக்காலை நட்டனர். நிகழ்ச்சியில் முத்துராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்உதயம் சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி உள்பட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments