மணமேல்குடி தொழில் அதிபர் கொலை-கொள்ளை வழக்கு: நகைகளை மீட்க போலீசார் கேரளா விரைந்தனர்
        புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தில் தொழில் அதிபர் முகமது நிஜாமை (வயது 53) கொலை செய்து 170 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து மொத்தம் 79 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 91 பவுன் நகைகள் மீட்கப்பட வேண்டி உள்ளது.

இந்த வழக்கில் கைதான யூனுஸ் என்பவர் 40 பவுன் நகைகளை கேரளாவில் விற்றதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கேரளா விரைந்தனர்

இந்த வழக்கில் கைதாகி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட கதிரவன், ஜோஸ்மில்டன், யூனுஸ் ஆகிய 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டது. இதில் கதிரவன், ஜோஸ்மில்டன் ஆகியோரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட பின் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

யூனுசை மட்டும் காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் விற்ற நகைகளை மீட்க போலீசார் யூனுசை அழைத்து கொண்டு கேரளா விரைந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments