புதுக்கோட்டையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் கொளுத்தும் வெயில் பொதுமக்கள் கடும் அவதி




புதுக்கோட்டையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கோடை காலம்

தமிழகத்தில் கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் காலகட்டத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாகும். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த கால கட்டத்தில் வெயில் கடுமையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடக்கம் மற்றும் நிறைவு நாளில் மட்டும் லேசாக கோடை மழை பெய்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

கொளுத்தும் வெயில்

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்பும் புதுக்கோட்டையில் வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கிடையில் திடீரென மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது.

மே மாதம் முடிந்து ஜூன் மாதம் பிறந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்தப்படியே உள்ளது. பகலில் வெளியில் செல்லும் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தால் அல்லல்படுகின்றனர். வெயிலின் தாக்கம் எப்போது குறையுமோ? என பொதுமக்கள் ஏக்கத்தில் தவித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments