பொதுத்தேர்வை 6¾ லட்சம் பேர் எழுதவில்லை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்    
        10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த பொதுத்தேர்வு தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு நாளும் தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை கல்வியாளர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மொத்தமாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 26 லட்சத்து 77 ஆயிரத்து 503 மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர். தேர்வு முடிந்த நேரத்தில் இந்த எண்ணிக்கையில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை எதிர்கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை கல்வித்துறை மறுத்துவந்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

     சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘முதல்-அமைச்சர் இதுபற்றி எங்களை அழைத்து சொல்லியிருக்கிறார். 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 6 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதாமல் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாகவும் தனியாக திட்டங்களை வகுத்துவருகிறோம். 

    ஜூலை, செப்டம்பர் மாதங்களில் அவர்களை தேர்வு எழுதவைக்கும் முனைப்பில் இருக்கிறோம். ஏன் வரவில்லை என்ற காரணத்தை அறிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த பணியிலும் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. பொதுத்தேர்வை எழுத வராத மாணவர்கள் தயவுசெய்து தேர்வு எழுத வாருங்கள்' என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments