ராமநாதபுரம் - காரைக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகள் செயல்பட தொடங்கின




ராமநாதபுரம்-காரைக்குடி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 சுங்கச்சாவடிகளும் செயல்பட தொடங்கின. கட்டண விவரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் ராமநாதபுரம், ராமநாதபுரம்-காரைக்குடி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 சுங்கச்சாவடிகளும் செயல்பட ெதாடங்கின. கட்டண விவரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்கம் ராமநாதபுரம் பகுதியில் இருந்து தேவிப்பட்டினம், சோழந்தூர், ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி வழியாக காரைக்குடி செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. விபத்துகளை தடுக்கவும், வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாகவும் ராமநாதபுரம்-காரைக்குடி இடையே 80 கிலோ மீட்டர் தூரம் இருவழி சாலையை 10 மீட்டர் அகலத்திற்கு அகல சாலையாக அகலப்படுத்தும் பணிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.455 கோடி நிதியில் தொடங்கப்பட்டன.

 இந்த பணிகள், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வந்தன. வாகன நிறுத்தம் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வெண்ணத்தூர் மற்றும் தேவகோட்டை அருகே கோடிக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த சுங்கச்சாவடிகள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. 

இந்த 2 சுங்கச்சாவடியில் 6 வழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க சுங்கச்சாவடியை சுற்றி 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கனரக வாகனங்களை நிறுத்த வசதியாக வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள், பயணிகள் வசதிக்காக கழிப்பறை வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார், ஜீப், வேன் ஒன்றுக்கு ரூ.35 கட்டணமும், பஸ்க்கு ரூ.110-ம், கனரக வாகனத்திற்கு ரூ.175 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையக அதிகாரி தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments