இன்று ஜூன் 14 உலக இரத்த தான தினம்.! உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்த தானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும் பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் 'ரத்த தானம்' முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

நோக்கம்:

மனிதனின் உயிர்நாடியாக காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும், இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும்

இரத்தத்தின் அவசியம்:

* ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 450 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.

* ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.
பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள் மற்றும் நடைமுறைகள்

தகுதிகள்:

* இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.

* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

நடைமுறைகள்:

* இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவு, உறக்கம் இரண்டும் மிகவும் அவசியம்.

* இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும்.

இரத்த தானம் செய்வதை தவிர்த்தல்:

* இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது
இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  (எய்ட்ஸ், மேக நோய் ,  நீரழிவு நோய், இரத்த அழுத்தம், வலிப்பு நோய்)

  இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்

* இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.

* இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் (Heamoglobin) சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்: அதனால் கிடைக்கும் நன்மைகள்
 
 * இரத்த தானம் செய்தால் நன்மைகளைத் தான் ஏராளமாக பெறலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

 * மனிதனின் உடலில் சுமார் 5-6 லிட்டர் இரத்தம் இருக்கும். இரத்த தானம் செய்வோர் ஒரே நேரத்தில் 300 மிலி இரத்தம் வரை தானம் செய்ய முடியும். இப்படி தானம் செய்யப்படும் இரத்தமானது 2 வாரங்களில் நம் உடலில் உண்ணும் உணவுகளால் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்.

* இரத்த தானம் செய்வது என்பது, உடலில் புதிய இரத்தத்தின் அளவை அதிகரிப்பதற்கு சமம். எனவே உங்களுக்கு புதிய இரத்த செல்கள் வேண்டுமானல், இரத்த தானத்தை செய்து வாருங்கள்.

 * சமீபத்திய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்து வருவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இரத்த தானம் செய்யுங்கள்.

* உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகமாகும் போது, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கணைய பாதிப்பு போன்றவை ஏற்படும். ஆனால் இரத்த தானத்தை ஒருவர் செய்து வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து வெளியேற்றப்பட்டு, கல்லீரல் மற்றும் கணைய பாதிப்பு ஏற்படுவது குறையும்.

 * அடிக்கடி இரத்த தானம் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாயின், பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

* இரத்த தானம் செய்வதால், உடலில் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். இதனால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயமும் குறையும்.

* இரத்த தானம் செய்யும் செய்யும் போது, மனதில் மற்றவருக்கு உதவிய சந்தோஷம் மற்றும் திருப்தி கிடைத்து, மனதில் ஒருவித மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடும்.

* இரத்த தானம் செய்வோரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்வோர் 18 வயது நிரம்பியராகவும், 60 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு நோய்த்தொற்றும் இல்லாதவராக இருக்க வேண்டும்.  இரத்த ஹீமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும், 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

* ஒரு ஆண் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம். அதேப் போல் ஒரு பெண் 4 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்.

ஜூன் -14 உலக இரத்ததான தினம்.

உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்

வெளியீடு : 

GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments