சுருக்குமடி வலைக்கு தடை ஆணை மத்திய, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
    சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை கோரி விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் உள்ளிட்ட 9 மீனவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘கடலில் 12 கடல் மைலுக்கு மேல் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
ஆனால், கடலில் 12 கடல் மைல் சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி தடை விதித்தது. மீன்பிடி தடை காலம் ஜூன் 15-ந் தேதி முடிவடைந்த நிலையில், தமிழக அரசு விதித்துள்ள தடை 15 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

எனவே தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயசுகின், மனுவில் கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்டு வாதிட்டார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் மனுக்களை சம்பந்தப்பட்ட அரசு வக்கீல்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments