சாலை அமைத்து தரவேண்டியும் குப்பை சுத்தம் செய்து தருமாறும் பொதுமக்கள் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பழைய காலனியில் போடப்பட்ட தார்ச்சாலை சுமார் 15 வருடத்திற்கு முன் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது இந்த சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இங்கு மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் பெருமளவு குளம் போல தேங்கி நிற்கின்றது. இந்த சாலையானது  குண்டும் குழியுமாக உள்ளதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து வருகின்றனர். குறிப்பாக மழை நேரத்தில் சொல்லவே வேண்டியதில்லை, இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் புதிய சாலை அமைத்து தரவேண்டியும் மேலும் பழைய காலனியில் இருந்து அரண்மனை நோய்பு செல்லும் சாலையில் குப்பை கிடங்காக மாறி வருகிறது இதையும் சுத்தம் செய்து தருமாறும் தெரு விளக்குகளை சரிசெய்து தரவும் பழைய காலணி பொதுமக்கள் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments