கலை-அறிவியல் படிப்பில் சேர ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பம் கணினி மையங்களில் கூட்டம் அலைமோதல்




கலை-அறிவியல் படிப்பில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து வருவதால் கணினி மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ஆன்லைன் விண்ணப்பம்

தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து உயர்கல்வி படிப்பில் சேர மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர். மேலும் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர் கல்வி படிக்க திட்டமிட்டு வருகின்றனர். மேலும் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிகம் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் கணினி மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் தங்களது செல்போன் அல்லது மடிக்கணினி மூலம் இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர்.

அரசு கல்லூரிகள்

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி, மன்னர் கல்லூரி, கறம்பக்குடி, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி ஆகிய இடங்களில் அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இதுதவிர தனியார் கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. அரசு கல்லூரிகளை பொறுத்தவரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்த பின் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது வருகிற 7-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பின் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புறங்கள் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments