பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தல்
ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.களபம் அரசு தொடக்கப்பள்ளியில் 39 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்தநிலையில் 4-ம் வகுப்பு பயிலும் மாணவர் பரத் (வயது 9) மீது மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, பள்ளியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமியை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா பணியிடை நீக்கம் செய்துள்ளார். பள்ளிக்கட்டிடம் பலவீனமாக இருந்ததற்கு தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் குமரேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மணிகண்டன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments