தடம் மாறும் இளைய தலைமுறை! பெற்றோர்களே உஷார்!! நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக சொந்த வீட்டிலேயே 52 பவுன் நகையை திருடிய 9-ம் வகுப்பு மாணவன்...
        மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள பல்கலை நகரைச் சேர்ந்த 48 வயதான நபர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டிலிருந்த 52½ பவுன் நகைகளை காணவில்லை என நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில் புகார் கொடுத்தவரின் 14 வயது மகனான 9-ம் வகுப்பு மாணவன், தனது சொந்த வீட்டிலேயே திருடியதும், அவற்றை தனது பள்ளி நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விற்று அந்த பணத்தில் பள்ளி ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் ஜாலியாக ஊர், ஊராக சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து 3 மாணவர்கள் மீதும் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவர்கள் 3 பேரும் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments