தடம் மாறும் இளைய தலைமுறை! தொடர்-2 வங்கி கணக்கில் இருந்து அம்பேல் ஆன ரூ.39 லட்சம்... மகனால் அப்பாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!




வங்கி கணக்கில் இருந்து அம்பேல் ஆன ரூ.39 லட்சம்... மகனால் அப்பாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!


ஆன்லைன் விளையாட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவது மட்டுமின்றி, ஆன்லைனில் விளையாடக்கூடாது என பெற்றோர் கண்டித்தால் தற்கொலைக்கு முயற்சிப்பது, தற்கொலை செய்து கொள்வது, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களிலும் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டங்கள் இளைஞர்களையும், ஆன்லைன் வீடியோ கேம்கள் சிறுவர், சிறுமிகளை சீரழித்து வருகிறது. இன்றைய கால குழந்தைகள் நண்பர்களுடன் வெளியே சென்று ஓடி, ஆடி விளையாடுவதற்கு பதிலாக வீட்டிலேயே கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் ஆகியவற்றின் ஸ்கிரீன்கள் முன்பு அடிமைகளாக மாறிவருகின்றனர்.

ஆன்லைன் விளையாட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவது மட்டுமின்றி, ஆன்லைனில் விளையாடக்கூடாது என பெற்றோர் கண்டித்தால் தற்கொலைக்கு முயற்சிப்பது, தற்கொலை செய்து கொள்வது, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களிலும் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். அனைத்திற்கும் மேலாக பெற்றோர்கள் வங்கி கணக்கில் இருந்து பல லட்சங்களை எடுத்து வீடியோ கேமிற்காக செலவிட்ட பிள்ளைகள் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

தற்போது அப்படியொரு செய்தி தான் சோசியல் மீடியாவை உலுக்கி வருகிறது. தனது தந்தையின் செல்போனில் கேம் விளையாடிய மகன், அதில் அடுத்தடுத்த லெவலுக்குச் செல்வதற்காக அவருக்கு தெரியாமல் அவரது கணக்கில் இருந்து சுமார் 39 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆக்ரா கண்டோலி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர், அங்குள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.39 லட்சம் மோசடி கும்பலால் திருடப்பட்டுள்ளதாகவும், இவ்வளவு பெரிய தொகை எப்படி தனது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என தனக்கு தெரியவில்லை என்றும் புகார் அளித்துள்ளார். மேலும் முதல் தொகையானது Paytm மூலமாக 'கோடா பேமெண்ட்' க்கு மாற்றப்பட்டு, அதிலிருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது.


இதுகுறித்த புகார் கிடைக்கப்பெற்றதும் ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில் இந்தக் கணக்கு கிராஃப்டன் நிறுவனத்துடையது என்பதைக் கண்டறிந்த போலீசார், அந்நிறுவனம் தென் கொரிய நிறுவனம்தான் BGMI உட்பட பல மொபைல் கேம்களை உருவாக்கியுள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவில் PUBG மொபைல் கேமிற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு இந்த விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது. விசாரணையில் அவருடைய மகன் அந்நிறுவனத்தின் வீடியோ கேமை விளையாடியதும், அதற்காக தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை செலவிட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மகனிடம் செல்போனை கேம் விளையாட கொடுத்ததை எண்ணி புலம்பி வருகிறார்.


இதுபோன்ற பல வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிபர்வத் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரின் மகன் மொபைலில் கேம் விளையாடி தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து 30 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அரங்கேறியது.


கேம்களை விளையாடும் போது கணக்குகளில் இருந்து இந்த பணம் எடுக்கப்படுவதை தவிர, பல முறை ஆன்லைன் மோசடி செய்பவர்கள் விளையாட்டின் லெவல் அல்லது தேவைகளை அதிகரிக்க பணம் கேட்கின்றனர். வீடியோ கேமிற்கு அடிமையான குழந்தைகளும் பணத்தைப் பற்றி எதுவும் அறியாமல், கேமில் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக பெற்றோரின் வங்கி கணக்கில் இருக்கும் தொகையை செலவழிக்கின்றனர். எனவே குழந்தைகளுக்கு விளையாட செல்போன் கொடுத்தால், வங்கி மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆஃப்களை பாதுகாப்பாக முடக்கிய பிறகு கொடுக்க வேண்டுமென சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments