மீமிசலில் சிமெண்ட் சட்டியை மண் சட்டி என்று விற்பனை செய்த வடமாநிலத்தவர் விரட்டியடிப்பு


மீமிசல் கடைவீதியில் சிமெண்ட் சட்டியை மண் சட்டி என்று விற்பனை செய்த வடமாநிலத்தவரை கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகள் விரட்டியத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடை வீதியில் இன்று ராஜஸ்தான் வாகனத்தில் ரூ.50 க்கு மண் சட்டி என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். இதில் சந்தேகமடைந்த கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகள் நேரில் சென்று உடைந்த சட்டி ஒன்று தருமாறு கேட்டபோது சுட்ட மண் கட்டியை காண்பித்து உதிர்த்துக் காட்டினர். ஆனாலும் ஒரு சட்டியை உடைத்துக் காட்ட வேண்டும் என்று கேட்ட போது மறுத்து விட்டனர்.

விடாப்பிடியாக  ஒரு சட்டியை அதற்கான தொகையை கொடுத்து அதை  உடைத்துப் பார்த்த போது அது சிவப்பு வர்ணம் பூசப்பட்ட சிமெண்ட் சட்டி என்று தெரியவந்தது இதை அறியாமல் வாங்கிய பொதுமக்களுடைய தொகையையும் வாங்கி கொடுக்கப்பட்டது உடனே அந்த கும்பலை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டன.

நமது ஊர் மற்றும் அருகாமை கிராமத்தைச் சேர்ந்த  மக்கள் நிறைய பேர் இந்த சட்டியை வாங்கிச் சென்றுள்ளார்கள். சிமெண்ட் சட்டியில் சமைத்து உண்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments