மாற்றுச் சான்றிதழ் (TC) தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்
திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,
தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும். டிசி தர மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம். வரும் கல்வி ஆண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளதால் 11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்து 5 நாட்கள் வகுப்புகள் நடக்காது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல்துறை அதிகாரிகள் மூலம் தினமும் 2 மணி நேரம் உளவியல் பயிற்சிகள் வழங்கப்படும்.மாணவர்கள் தற்போது 90% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தாத 10% பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். எந்த சட்ட போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது,என்றார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.