பத்ம விருதுகள் பெற தகுதி வாய்ந்த தனிப்பட்ட நபர்கள் 08.07.2022க்குள் விண்ணப்பிக்கலாம். -. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட நபர்களிடமிருந்து இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்றியவர்கள் மகத்தான சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு அவர்களது சேவையை பாராட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்றியவர்கள் மகத்தான சாதனை படைத்தவர்கள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04322 222270 மூலம் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் 08.07.2022க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் வந்து சேரவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments