புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டி அகற்றம்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை பசுமை குழு அமைப்பினர் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள பசுமை குழு அமைப்பினர் புதுக்கோட்டையின் பல்வேறு இடங்களில் மரங்களை நட்டு, பராமரித்தும் வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையின் சில முக்கிய இடங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மரம் வெட்டப்பட்டதற்கான காரணம் தெரிந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மரங்கள் வெட்டி அகற்றம்

அகற்றம் இதுகுறித்து பசுமை குழு உறுப்பினர்கள் கண்ணன் கூறுகையில், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியை அழகுபடுத்துவதாக சொல்லிக் கொண்டு பழமையான மரங்களை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

முதலில் கல்லூரியின் முகப்பில் இருந்த அசோக மரங்கள் வெட்டப்பட்டன. பின்னர் காந்தி பூங்காவில் இருந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தேர்வு நெறியாளர் அலுவலகம் பின்புறம் இருந்த மரங்கள் வேறோடு அகற்றப்பட்டன.

 தற்போது கல்லூரியின் முகப்பில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான நல்ல நிலையும், காற்றையும், கல்லூரிக்கு அழகையும் கொடுத்து கொண்டிருந்த 2 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. வேண்டுகோள் இப்படி மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சர் படித்த கல்லூரியே இந்த நிலையில் தான் உள்ளது. இதே நிலையில் போனால் மாமன்னர் கல்லூரி விரைவில் மரங்களற்ற தரிசாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்றார். எனவே மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments