குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் விழிப்புணர்வு முகாம்
        புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை இரண்டையும் தவறாமல் கொடுக்க வேண்டும்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி, அடப்பன்வயல் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாமினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழக அரசு 2023 ஆம் ஆண்டிற்குள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே இலக்கு ஆகும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 
 உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அதன்படி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பினைத் தடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,799 அங்கன்வாடி மையங்களும், 76 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 257 துணை சுகாதார நிலையங்களும், 13 அரசு மருத்துவமனைகளும், ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் என ஆகமொத்தம் 2,146 இடங்களில் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 17.07.2022 முதல் 30.07.2022 வரை நடைபெறுகிறது. மேலும் பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாழ்வு, கிராம பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வி ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 
 கொரோனா குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை இரண்டையும் தவறாமல் கொடுக்க வேண்டும். துத்தநாக மாத்திரையை 14 நாட்கள் வரை தொடர்ந்து கொடுக்கவும். மேலும் வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில், தாய்ப்பால் மற்றும் நீர் ஆகாரம் தொடர்ந்து கொடுக்கவும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சிகிச்சைக்கு அருகில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டடர் அர்ஜூன்குமார், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், நகராட்சி ஆணையர் நாகராஜன், நகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments