செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு :நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி






         நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இம்மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு குறித்து, நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன் பங்கேற்றார். புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, செஸ் பலகை மற்றும் காயின் மாதிரி வடிவங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டு, பள்ளி மைதானத்தில் ஏற்படுத்தியிருந்த செஸ் பலகை, காயின் மாதிரி வடிவங்களையும் பார்வையிட்டு பாராட்டினார். பின்னர் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து நீதிமன்ற வளாகம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments